3 வருடங்களாக ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டிய பாலாவின் நான் கடவுள் இந்த மாதம் வெளியாகிறது. நேற்று நடந்த பாடல்கள் வெளியீட்டு விழா, படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் (31.12.2008) நான் கடவுள் படம் சென்சார் உறுப்பினர்களுக்காக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பெற்றோர் துணையுடன் பார்க்கத்தகுந்த யு/ஏ சான்றிதழ் வழங்கினர்.
ஆபாசத்தில் நம்பிக்கையில்லாத பாலாவின் நான் கடவுளுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க காரணம் படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக் காட்சிகள். கிளைமாக்ஸ் சண்டையை மடடும் பல நாட்களுக்கு படமாக்கியுள்ளனர்.
மேலும், சண்டைக் காட்சிகளில் நடித்த ஆர்யா உள்பட அனைவருக்கும் ரத்தக் காயம் ஏற்படும் அளவுக்கு தத்ரூபமாக எடுத்துள்ளனர். இந்த ஆக்சன் காட்சிகளின் காரணமாகவே நான் கடவுளுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார்.