Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் மிலிந்த் சோமன்

Advertiesment
மீண்டும் மிலிந்த் சோமன்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:15 IST)
மாடலாக இருந்து நடிகரானவர் மிலிந்த் சோமன். ாடல் உலகில் இவர் ான் ஆபிரஹாம் போன்றவர்களுக்கெல்லாம் முன்னோடி. படத்தின் கதை பிடித்திருந்தால் எப்போதாவது இந்திப் படங்களில் தலைகாட்டுவார். மற்றபடி மாடலிங்தான் இவரது உலகம்.

மிலிந்த் சோமன் நடித்த ஒரே தமிழ்ப் படம், பச்சைக்கிளி முத்துச்சரம். ஜோதிகாவின் கணவனாக சரத்குமாரை பிளாக் மெயில் செய்யும் ஆறரையடி உயர வில்லன் இவர்தான். பச்சைக்கிளி முத்துச்சரத்துக்குப் பிறகு எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்காதவரை தனது பையா படத்தில் நடிக்க அழைத்து வந்திருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி.

கார்த்தி, தமன்னா நடிக்கும் பையாவின் பாடல் காட்சி பெங்க‌‌்ளூருவில் படமாகி வருகிறது. மதி ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையில் தயாராகிவரும் பையாவில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார், மிலிந்த் சோமன்.

தமிழ் சினிமா மிலிந்த் சோமனை தொடர்ந்து பயன்படுத்தும் விதமாக அவரது கதாபாத்திரம் இருக்கும் என்று நம்புவோம்.

Share this Story:

Follow Webdunia tamil