Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழில் அனந்தபத்ரம்

Advertiesment
தமிழில் அனந்தபத்ரம்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:14 IST)
டெர‌ரிஸ்ட், மல்லி, தஹான் படங்களின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த சந்தோஷ் சிவன் மலையாளத்தில் இயக்கிய படம், அனந்தபத்ரம். மலையாள மண்ணிற்கேயு‌ரிய மாந்த்‌‌ரீகத்தை பின்னணியாகக் கொண்டு உருவான அனந்தபத்ரம் கேரள அரசின் ஐந்து விருதுகளை வென்றது.

ப்ருத்விரா‌ஜ், பிஜு மேனன், மனோ‌ஜ் கே. ஜெயன், காவ்யா மாதவன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். சுனில் பரமேஸ்வரனின் அனந்தபத்ரம் நாவலை தழுவி இப்படத்தை எடுத்திருந்தார் சந்தோஷ் சிவன்.

இந்தப் படம் சிவபுரம் என்ற பெய‌ரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. தமிழ வசனங்களை மருதபரணி எழுதுகிறார். பாடல்களை எழுதுகிறவர் பிறைசூடன்.

விரைவில் படம் வெளியாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil