Publish Date: Tue, 06 Jan 2009 (23:10 IST)
Updated Date: Wed, 31 Dec 2008 (16:17 IST)
அயன் படத்தில் நடித்துவரும் சூர்யா, கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் முதல் முறையாக நடிக்கிறார்.
அயனை தொடர்ந்து 3 படங்கள் சூர்யாவுக்காக காத்திருக்கின்றன. நந்தலாலாவை இயக்கிவரும் மிஷ்கினின் முதல் சூப்பர் ஹீரோ படமான முகமூடி. ஹரி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் சிங்கம். மூன்றாவதாக கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் ஆதவன்.
முகமூடியை யு டிவி தயாரிக்கிறது. இந்த ப்ராஜெட் டேக் ஆஃப் ஆக இன்னும் பல மாதங்கள் ஆகும். சிங்கத்தை தொடங்க ஹரி தயாராக இருந்தாலும் சூர்யா முதலில் கே.எஸ். ரவிக்குமாரின் ஆதவனில்தான் நடிப்பார் என்பது உறுதி செய்யப்படாத தகவல்.
குருவியை தயாரித்த உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் ஆதவனை தயாரிக்கிறது. இது உதயநிதியின் இரண்டாவது தயாரிப்பு.
ஆதவனில் நடிக்க நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது. லிங்குசாமியின் பையா படத்திலிருந்து விலகிய நயன்தாரா ஆதவனில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பது கடைசியாக கிடைத்த தகவல்.