நயன்தாரா தமிழில் நடிக்காமல் விட்ட இடைவெளியை வெற்றிகரமாக நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் டப்பிங் பட தயாரிப்பாளர்கள்.
பில்லா, சத்யம் படங்களைத் தொடர்ந்து நயன்தாராவின் கவர்ச்சிக்கு தமிழ்நாட்டில் மவுசு அதிகரித்துள்ளது. இதனை மோப்பம் பிடித்த சிலர் நயன்தாரா தெலுங்கில் நடித்த படங்களை மொழிமாற்றம் செய்து வெளியிடுவதில் முனைப்புகாட்டி வருகின்றனர்.
நயன்தாரா, ரவி தேஜா இணைந்து நடித்த துபாய் சீனு, துபாய் ராணி என்ற பெயரில் தமிழ்ப் பேசப் போகிறது. இதனைத் தொடர்ந்து நயன்தாராவின் இன்னொரு படமான யோகியும் தமிழில் வெளியாகிறது.
பிரபாஸ் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த யோகியை வி.வி. விநாயக் இயக்கியிருந்தார். தமிழில் முரட்டு தம்பி என்ற பெயரில் இப்படம் வெளியாகிறது.
நயன்தாராவுடன் மூமைத்கானும் போட்டி போட்டு கவர்ச்சி காட்டியிருப்பதால் போட்ட பணம் திரும்ப கிடைத்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லாமல் இருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு.