Entertainment Film Featuresorarticles 0812 30 1081230087_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நம்பர் ஒன் இடம்தான் லட்சியம்

Advertiesment
ரெண்டு அனுஷ்கா விஜய் வேட்டைக்காரன் பில்லா நம்பர் ஒன்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:59 IST)
சில வருடங்களுக்கு முன் வெளியான 'ரெண்டு' படத்தில் நடித்த நாயகி அனுஷ்கா. அதற்குப் பிறகு சொல்லிக் கொள்கிற அளவுக்கு தமிழில் படங்கள் எதுவும் அமையாததால் வெறுத்துப் போனவர், தெலுங்கு சினிமாவிற்கு சென்றார். அங்கே சில படங்கள் வெற்றியடைய தொடர்ந்து படங்கள் கிடைத்து பிஸியானார்.

தற்போது மீண்டும் தமிழில் அதுவும் விஜய்க்கு ஜோடியாக 'வேட்டைக்காரன்' படத்தில் நடிக்கிறார். தமிழே வேண்டாமென்று இருந்தவருக்கு விஜய் ஹீரோ என்றதும் ஒப்புக்கொண்டு நடிக்க வந்துள்ளார். அதுவும் கல்லூரி மாணவி என்றால் கேரக்டரும் நன்றாகத்தான் இருக்கும்.

மேலும், தமிழில் அஜித் நடித்த 'பில்லா' படம் தெலுங்கில் ரீ-மேக் செய்யப்படுகிறது. அதில் நயன்தாரா கேரக்டரில் நடிக்கிறார். அந்தப் படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது.

அதற்கடுத்த படமாக 'வேட்டைக்காரன்' படத்தில் நடிக்கவுள்ளார். மீண்டும் தமிழுக்கு விஜய் ஹீரோ என்பதனால் மட்டும் வரவில்லை. தமிழில் நம்பர் ஒன் நடிகையாக வரவேண்டும் என்கிற லட்சியத்தோடுதான் களம் இறங்கியிருக்கிறேன் என்கிறார் அனுஷ்கா.

Share this Story:

Follow Webdunia tamil