Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இசைக்கும் இயக்குனர்

Advertiesment
இசைக்கும் இயக்குனர்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:58 IST)
படம் இயக்க வேண்டும், பாடல் எழுத வேண்டும், நடிக்க வேண்டும் இன்னும் சினிமாவில் என்னென்ன வாய்ப்புகள் கிடைக்கிறதோ அதையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் இயக்குனர் பேரரசு. அதன்படி தற்போது இசையமைப்பாளராகவும் புதிய அவதாரம் எடுக்கவுள்ளார்.

திருவண்ணாமலை எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை என்றாலும், அடுத்த படமான திருத்தணி வேலையில் இறங்கிவிட்டார். தன் படங்களுக்கு ஸ்ரீகாந்த் தேவாவை தொடர்ந்து பயன்படுத்தி வந்த பேரரசு, திருத்தணிக்கு தானே இசையமைக்க முடிவு செய்திருக்கிறார்.

அதற்காக தன் பழைய நண்பரான இசையமைப்பாளர் இனியவன் என்பவரை அணுகி, பாடல்கள் எழுதித் தருகிறேன் மெட்டுப் போட்டு இசையமைத்துககொடு, பணம் மட்டும்தான் கொடுக்க முடியும் டைட்டிலில் என் பெயர்தான் வரும் என்று சொல்ல, முதலில் தயங்கிய இனியவன், பேரரசுவின் வற்புறுத்தலுக்காக ஒப்புக்கொண்டுவிட்டார்.

ஆக, தமிழ் சினிமாவுக்கு பேரரசு எனும் இன்னொரு இசையமைப்பாளர் கிடைத்துவிட்டார். ஜமாய்ங்க பேரரசு சார்... காத்து நல்லா அடிக்குது.

Share this Story:

Follow Webdunia tamil