Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தூக்கி நிறுத்தும் இமேஜ்

Advertiesment
தூக்கி நிறுத்தும் இமேஜ்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:57 IST)
கேப்டன் விஜயகாந்தை வைத்து இயக்குனர் விக்ரமன் தற்போது இயக்கிவரும் படம் மரியாதை. இதன் படப்பிடிப்பு மதுரை சுற்றுவட்டார இடங்களில் தொடர்ந்து நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது காரைக்குடியில் குழுவினரோடு தங்கியிருக்கும் விஜயகாந்த் அவ்வப்போது திருமங்கலம் இடைத்தேர்தல் பணிகளுக்கும் சென்று வருகிறார்.

சென்னை காதல் பட‌த்தை பரத்தை வைத்து இயக்கியதற்குப் பிறகு, இயக்கும் படம் என்பதால் இந்த 'மரியாதை' படத்தின் மூலம் இழந்த தன் இமேஜை மீட்டெடுக்கப் போவதாக கூறி வருகிறார் விக்ரமன்.

படப்பிடிப்பு ஆரம்பம் என வெளியான பேப்பர் விளம்பரத்திலேயே தங்களின் 'வானத்தைப் போல' படத்தின் வாசனை வருகிறதே என்றால், அதெல்லாம் ஒன்றுமில்லை என்று மறுக்கிறார்.

இன்றைய பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல், இளைஞர்களுக்கும் பிடித்தமான படமாக இருக்கும். அதுவும் 'யூத்'கள் திரும்பத் திரும்ப வந்து பார்க்கிற படமாக எனது 'மரியாதை' இருக்கும் என்கிறார். விஜயகாந்தை வைத்து யூத்தக்கு பிடித்தமான படம் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil