Publish Date: Tue, 06 Jan 2009 (22:53 IST)
Updated Date: Tue, 30 Dec 2008 (14:34 IST)
ஆடிப்பாடி களைத்துப்போன நடிகை த்ரிஷா, இரண்டு வாரங்கள் யாரும் என்னை தொந்தரவு செய்யக்கூடாது என்று தான் நடிக்கும் பட கம்பெனி மேனேஜர்களுக்கு கண்டிஷனே போட்டுள்ளார். காரணம் வரும் புத்தாண்டைக் கொண்டாட ஆஸ்திரேலியா பறக்கவுள்ளார்.
இரண்டு ஆண்டுகளாய் ஓய்வே இல்லாமல் நடித்ததால் உடல் சோர்ந்து போனதோடு, மனதளவிலும் ரிலாக்ஸ் இல்லாமல் தவிக்கிறேன். மனசுக்கும், உடலுக்கும் சார்ஜ் ஏற்றிக்கொள்ளச் செல்கிறேன் என்கிறார். தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்கள், புதிய கமிட்மெண்டுகள் எல்லாம் வந்த பிறகுதானாம்.
இப்புத்தாண்டை மிகவும் ஜாலியாக கொண்டாடத் திட்டமிட்டதோடு, தன் கல்லூரித் தோழிகள், குடும்ப உறவினர்கள் என்று ஏராளமான பேரை ரொம்பவும் மிஸ் பண்ணிவிட்டேன். அவர்களோடு சேர்ந்தும் பிடித்தமான விஷயங்களைச் செய்யப் போகிறேன் என்று ஒரு குழந்தையின் குதூகலத்தோடு கூறுகிறார்.