Publish Date: Tue, 06 Jan 2009 (22:49 IST)
Updated Date: Mon, 29 Dec 2008 (18:53 IST)
இயக்குனர் பேரரசு தான் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த திருவண்ணாமலை படமும் சொல்லிக் கொள்ளும்படி ஓடாத காரணத்தால் மிகவும் நொந்து போயிருக்கிறார்.
அதுமட்டுமின்றி, படத்தின் நாயகன் அர்ஜுன்தான் என்றாலும், ஹீரோவுக்கு நிகராக தன் போட்டோவையும் பெரியதாக விளம்பர டிசைன்களில் போட்டதால்... திருவண்ணாமலை படத்தின் தயாரிப்பாளரான பாலச்சந்தர் அடக்கி வாசிக்கச் சொல்ல... தற்போது அதனாலும் மனமுடைந்திருக்கிறார்.
தற்போது அவருக்கிருக்கும் ஒரே ஆறுதல் படங்களில் பாடல்கள் எழுதுவதுதான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிவரும் 'ஆறுமுகம்' பரத் ஹீரோ. அடுத்து 'தொட்டுப்பார்' புதுமுகம் நடிக்க, புதுமுகம் இயக்கும் படம். இரண்டு படங்களிலும் தலா ஒரு பாட்டு எழுதுகிறார்.
இதையடுத்து அவர் இயக்கத்தில் உருவாகும் 'திருத்தணி' படத்திலும் வழக்கம்போலவே ஒட்டுமொத்த பாடல்களையும் பேரரசுவே எழுதுகிறார். சில மாதங்களுக்கு முன்னால் என் படங்களில் இனி பாடல்கள் எழுதமாட்டேன் என்று சொன்னவர், தொடர் தோல்வியால் தன் முடிவை மாற்றிக் கொண்டார்.