Publish Date: Tue, 06 Jan 2009 (22:48 IST)
Updated Date: Mon, 29 Dec 2008 (17:41 IST)
இயக்குனர் பாலாவின் உதவியாளர் சிங்கம்புலி. அஜித் பல கெட்டப்களில் நடித்த 'ரெட்', சூர்யா-ஜோதிகா நடித்த 'மாயாவி' ஆகிய படங்களை இயக்கியவர். இரண்டு படங்களும் சுமாராக ஓடின.
ஆனால் அடுத்தப் படங்களைப் பெற்றுத்தரவில்லை. எனவே கொஞ்ச காலம் பார்த்திருந்துவிட்டு பின் பாலாவிடமே இணை இயக்குனராக சேர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
அப்படி அவர் 'நான் கடவுள்' படத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது சில தயாரிப்பாளர்கள் படம் செய்யச் சொல்லி கேட்டிருக்கிறார்கள்.
பாலா சிங்கம்புலியை அசோஸியேட்டாக நான் கடவுளில் சேர்க்கும் முன்பே படம் முடியும் வரை கூடவே இருக்க வேண்டும் என்று ஒப்புதல் வாங்கிக் கொண்டுதான் சேர்த்தார். படம் ஆண்டுக் கணக்கில் தாமதமாக, வந்த வாய்ப்புகளை மிஸ் பண்ணிவிட்டார்.
தற்போது கன்னட சினிமாவுக்குள் காலடி எடுத்து வைக்க 'செல்வராயசாமி' என்ற படத்தை இயக்கவுள்ளார். நான் கடவுள் படத்திலிருந்து வந்திருந்தாலும் வந்திருக்கலாம். ஆனால் பாலா குருவாகவும் இருப்பதால் தட்டிக் கழிக்க முடியாமல் படம் முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் வெளியே வந்தார் சிங்கம்புலி.