நல்ல நடிக என்று பெயரெடக்க வேண்டியவர் தற்போது கவர்ச்சி நடிகை என்று பெயரெடுக்கும்படி ஆகிவிட்டதே என்று கலக்கத்தில் இருக்கிறார் மோனிகா.
'அழகி' படத்தில் நடித்ததன் மூலம் அனைவர் மனதிலும் ஒட்டிக்கொண்ட இவர், அதற்குப் பின் சில படங்களில் நடித்தார். ஆனால் எதுவும் சரியாகப் போகாததால் சில மாதங்களுக்கு முன் வெளியான 'சிலந்தி' என்ற படத்தில் சற்று கவர்ச்சியாக நீச்சல் உடையில் நடித்தார்.
அப்படி நடித்ததுதான் தலைவலியை ஏற்படுத்திவிட்டது. தொடர்ந்து அதேபோன்ற கதைகளில் நடிக்க மட்டுமே அழைப்பு வருகிறதாம். அப்படி வந்த சில கதைகளில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனாலும், கவர்ச்சியாக நடிக்கக் கூடியவர் என்கிற இமேஜை உடைக்க முடியவில்லையாம்.
அதனால் இனி குடும்பப் பாங்கான கேரக்டரில் மட்டுமே நடிக்க வேண்டுமென தீர்மானித்திருக்கிறார். தற்போது நடித்து 9ம் தேதி வெளியாகும். அ ஆ இ ஈ படமும், ஸ்கூல் டீச்சராக நடித்துக் கொண்டிருக்கும் 'வர்ணம்' படமும் என் மேலுள்ள கிளாமர் கறையைப் போக்கும் என்கிறார். நடிக்கும்போது நடித்துவிட்டு இப்போது புலம்புவானேன்.