கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்னால் வெளியான படம் 'அலைகள் ஓய்வதில்லை'. இயக்குனர் பாரதிராஜா இயக்கினார். இப்படத்தில் கார்த்திக் ஜோடியாக அறிமுகமானவர் ராதா. முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது.
அதற்குப் பின்னால் ஏகப்பட்ட படங்களில் நடித்து பிஸியானார். ஒரு கட்டத்திம்றகு மேல் திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் ஐக்கியமானார். தற்போது தன் மகளை அழைத்துக்கொண்டு கோடம்பாக்கத்தில் காலடி எடுத்து வைத்தார்.
அவர் மகளின் புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் வெளியாக பல தயாரிப்பாளர்களும் ராதாவை அணுகியிருக்கின்றனர். ஆனால் அவர் முதல் படத்துக்கே பல லட்சங்களை சம்பளமாகக் கேட்க, முன்வந்த பல தயாரிப்பாளர்கள் பின்வாங்கியிருக்கின்றனர்.
இதனால் தமிழைவிட, தெலுங்கில் கேட்ட தொகை கிடைக்கும் என்று யாரே ஒருவர் கொளுத்திப் போட, மகளுடன் ஆந்திராவிற்கு பயணமாகியிருக்கிறார் ராதா. அங்கும் சம்பளம் பற்றிப் பேச, ஒரு சில தயாரிப்பாளர்கள் ஒத்துக்கொண்டு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் சில கண்டிஷன்களுடன். கண்டிஷன் என்னவென்று சொல்ல மறுக்கிறார் ராதா.