காதலர்களுக்கு அடுத்தவர்களால் தொல்லை வரும் படங்களைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் காதலர்களுக்கு காதலர்களே எதிரிகளாக மோதிக்கொள்ளும் புதுமையான கதையம்சத்துடன் ஒரு படம் தயாராகி வருகிறது.
மெஹ்ரா மூவீஸ் சார்பாக ஜாகீர் உசேன் தயாரிக்கும் 'தலை எழுத்து' என்ற படத்துக்காகத்தான் இந்தக் கதை. ராமநாராயணன், ராமராஜன், சுரேஷ் கிருஷ்ணா ஆகியோருடன் உதவி இயக்குனராக பணியாற்றறிய சுந்தர் பாரதி திரைக்கதை வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் பிரஜின்-சித்திகா என்ற புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். மேலும் ராஜேஷ், இளவரசு, கஞ்சா கருப்பு, வேல்முருகன் ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு மதுரை, அழகர் கோவில், குருவித்துறை போன்ற பகுதிகளில் தொடர்ந்து நடந்து வருகிறது.
எடிட்டிங் ராஜ்கீர்த்தி, ஒளிப்பதிவு சாய் நட்ராஜ், இசை ராஜபத்மன், சண்டைப் பயிற்சி தவசிராஜ், தயாரிப்பு ஒருங்கிணைப்பு சுரேஷ்காந்த். புதுமுகங்களை வைத்து எடுத்தாலும் கதை நன்றாக இருப்பதால் கவலைப்பட வேண்டியதில்லை என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் இயக்குனர்.