ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு திரைப்பட விழா சென்னையில் நடந்து வருகிறது. திரைப்படத் துறை சார்ந்தவர்கள் மட்டும் அல்லாமல் பொதுமக்களும் கண்டுகளிப்பார்கள். அதன்படி, வரும் 28 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் இதில் பல்வேறு படங்கள் ஒளிபரப்ப உள்ளனர்.
குறிப்பாக 'வாழு வாழவிடு' என்ற கருத்தை மையமாகக் கொண்ட படங்களைத் தேர்வு செய்து திரையிட்டுக் காட்ட இருக்கின்றனர். மேலும் விழாவின் முடிவில் தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்படும் சிறந்த படங்களுக்கு விருதும் வழங்கப்பட இருக்கிறது. இவ்விழாவில் அந்தந்த படங்களின் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.
ஒரே இடத்தில் பல்வேறு படங்களை பார்ப்பது திரைத் துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும், 'ஆபரேஷன் சன்ரைஸ்' என்ற ஜெர்மன் படம் திரையிடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பெற்றதுபோல் இந்த ஆண்டும் இவ்விழா சிறக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர் செவன்த் சேனல் நிறுவனத்தார். இவ்விழா நடக்கும் சென்னை பிலிம் சேம்பர் நாளை முதல் களைகட்டத் தொடங்குகிறது.