Publish Date: Tue, 06 Jan 2009 (22:36 IST)
Updated Date: Sat, 27 Dec 2008 (15:49 IST)
சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு நிறைய பேர் சென்றிருக்கின்றனர். டி.வி. தொகுப்பாளினியாக இருந்த சொர்ணமால்யா, எம்.எஸ். பாஸ்கர், காமெடி நடிகை ஆர்த்தி, சந்தானம் மற்றும் எஸ்.எஸ். மியூசிக்கில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய லேகா வாஷிங்டன் இப்படி ஏராளமானோர். அந்த பட்டியலில் தற்போது இன்னொருவரும் இணைந்துள்ளார்.
விஜய் டி.வி.யில் 'ஜோடி நம்பர் ஒன்' நிகழ்ச்சியை காம்பயரிங் செய்து வந்தவர் மகேஸ்வரி. தன் அழகான தெற்றுப் பல்லழகால் சிரிக்கச் சிரிக்கப் பேசிக் கவர்ந்தவர். அவர் தற்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரை கொஞ்ச காலமாக அந்த நிகழ்ச்சியில் காணவில்லையே...? என்று கேட்பவர்களுக்கான பதில்தான் இது.
தானு தயாரிக்க, சுசி கணேசன் இயக்கத்தில் விக்ரம், ஸ்ரேயா நடிக்கும் கந்தசாமி படத்துக்காக ஸ்ரேயாவின் தோழியாகவும், அதேபோல் தனம் படத்தில் நடித்த சங்கீதாவின் தம்பி நாயகனாக அறிமுகமாகும் படம் 'ஓடிப்போலாமா?' என்ற படத்திலும் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் மகேஸ்வரி.
மிகவும் முக்கியமான கேரக்டர் என்பதால் பெரிய திரையில் நானும் ஒரு ரவுண்ட் வருவேன் எனும் இவர், தொடர்ந்து டி.வி. நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டுவேன், அதற்கு நேரம் கிடைக்குமா என்று தெரியவில்லை என இப்போதே கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்.