Publish Date: Tue, 06 Jan 2009 (22:32 IST)
Updated Date: Sat, 27 Dec 2008 (13:39 IST)
நடிகர் விஜய் 49 படங்கள் நடித்துவிட்டு 'வில்லு' படத்திற்குப் பின் தன் அரை செஞ்சுரி படத்தில் நடிக்கவுள்ளார்.
சமீபத்தில் வெளியான அவரது அழகிய தமிழ் மகன், குருவி இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை என்பதால் வில்லு படத்தை மிகவும் எதிர்பார்ப்போடு கவனித்து வருகிறார் விஜய்.
இத்தனை படங்கள் நடித்து தனக்கென ரசிகர் மன்றங்கள், ஏராளமான ரசிகர்கள் என்று சூப்பர் ஸ்டார் நிலைக்கு அடுத்த இடத்தில் இருந்தாலும் சினிமா தொழில் மேல் உள்ள ஆர்வம் இன்றும் குறையிவில்லை.
கமல், அஜித், விக்ரம் போன்று வேறு வேறு கெட்டப்களில் சிரமம் எடுக்காவிட்டாலும், ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால் அதில் முழு ஈடுபாட்டுடன் இருப்பார்.
சிரமமான டான்ஸ் மூவ்மெண்ட், சென்டிமெண்டான காட்சிகள் நடிக்க வேண்டியிருந்தால் படப்பிடிப்புக்கு முதல் நாள் தனது அறையில் ஆடியும் நடித்தும் பயிற்சி எடுத்துக் கொள்கிறார். கேமரா முன் சுலபமாக ஆடிவிட்டாலும் அதற்கான கடின உழைப்பு இன்றும் அவரிடம் உள்ளது.
ஆனால் சமீபமாக ஒரே விதமான நடிப்பு ஸ்டைலையே காட்டி வருகிறார். அதை மட்டும் கொஞ்சம் மாற்ற பயிற்சி எடுத்தால் நன்றாக இருக்கும்.