Publish Date: Tue, 06 Jan 2009 (22:31 IST)
Updated Date: Fri, 26 Dec 2008 (19:44 IST)
இயக்குனர் சரணிடம் சில படங்களுக்கு உதவியாளராக பணியாற்றியவர் பாபு கே. விஸ்வநாத். அவர் தற்போது இயக்கிவரும் படம் கந்தா.
கரண் ஹீரோவாக நடிக்க, கேரளப் பெண் மித்ரா என்ற புதுமுகம் ஹீரோயினாக நடிக்கிறார். கந்தா படம் முடிக்கும் முன்பாகவே மித்ராவுக்கு சூரியன் சட்டக் கல்லூரி படத்தில் நடிக்கும் வாய்ப்பும் வந்து அதிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பல்வேறு மொழி நாயகிகளைத் தேடிப் பார்த்து மிகுந்த கஷ்டத்திற்குப் பின்தான் இவரை கண்டெடுத்திருக்கிறார் இயக்குனர். எர்ணாகுளம் சொந்த ஊர் என்றாலும் பிடித்த ஹீரோ ரஜினி என்கிறார். அதேபோல் இசை என்றால் இசை ஞானி இளையராஜாதான் என்று ஒரு புகழாரமே பாடுகிறார்.
பி.பி.ஏ. படித்திருக்கும் இவருக்கு கோழி பிரியாணி என்றால் ஒரு பிடி பிடிப்பாராம். காதலை யாரும் மிஸ் பண்ணவே கூடாது. அது ஒரு இனிய அனுபவம் என்றும் கூறுகிறார்.
தன் வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயமாக சமீபத்தில் நடந்த மும்பை தீவிரவாதிகளின் தாக்குதலைத்தான் குறிப்பிடுகிறார் மித்ரா. மேலும் கிளாமராக நடிப்பதிலும் தனக்கு ஆர்வமில்லை, அப்படி உடலை ஆபாசமாகக் காட்டுவதில்லை என்பதில் உறுதியுடனும் இருக்கிறார் இவர்.