Publish Date: Tue, 06 Jan 2009 (22:26 IST)
Updated Date: Fri, 26 Dec 2008 (17:11 IST)
ஆங்கிலப் பட தயாரிப்பு நிறுவனங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த வார்னர் பிரதர்ஸ் தமிழ்ப் படம் ஒன்றைத் தயாரிக்கிறது. பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்து படம் தயாரிக்கும் இந்நிறுவனம் முதல் முறையாக தமிழ்ப் படத்தை தயாரிப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
இந்நிறுவனத்தோடு இணைந்து ரஜினியின் மகள் செளந்தர்யாவின் சொந்த நிறுவனமான ஆக்கர் ஸ்டுடியோவும் சேர்ந்துள்ளது. கோவா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தமிழ் நடிகர்கள் ஜெய், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், சினேகா, ஜெனிலியா ஆகியோரோடு இணைந்து ஹாலிவுட் நடிகையான ஜெசிகா ஆல்ஃபாவும் நடிக்க இருக்கிறார்.
மிகுந்த பொருட் செலவில் தயாராகும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் பிப்ரவரி தொடங்குகிறது. ஹாலிவுட் நடிகையுடன் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் பேசி தேதி வாங்கிக் கொடுக்கவுள்ளது. அப்படி அவர் வந்து நடிக்க லேட்டானாலும், தமிழ் நடிக, நடிகைகளின் பகுதிகளை எடுக்கத் திட்டமிட்டிருக்கின்றனர்.