Publish Date: Tue, 06 Jan 2009 (22:26 IST)
Updated Date: Wed, 24 Dec 2008 (19:08 IST)
சில ஆண்டுகளாய் நடிக்காமல் இருந்து வந்த நடிகை சுஹாசினி தற்போது பலம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நல்ல கதை, நல்ல கேரக்டர் இருந்தால் மட்டும்தான் நடிக்க வேண்டும் என்றிருந்தவருக்கு இயக்குனர் முரளிகிருஷ்ணா சொன்ன கதை பிடித்துப்போக உடனே ஒப்புக்கொண்டார்.
இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் அரவிந்துக்கு அண்ணியாக நடிக்கிறார். முன்பொரு காலத்தில் சிறந்த நடிகை என்று பெயர் பெற்றிருந்தாலும், அன்று இருந்தது போல இன்றும் சினிமாவை நேசிக்கிறார். அவரின் நடிப்பு எங்களின் பலம் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது என்கிறார் இயக்குனர்.
மற்ற படங்களை அலசி ஆராய்ந்து சேனலின் நியாயத் தராசில் வைக்கும் சுஹாசினி, தன் நடிப்பைப் பற்றியும், படத்தின் நிறைகுறைகளையும் பாரபட்சமின்றி தராசில் வைத்து விமர்சனம் செய்வாரா? படம் வந்ததும் பார்ப்போம் அதன பலத்தை.