Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புத்தாண்டு கொண்டாட்டம் : பறக்கும் நடிகைகள்

Advertiesment
புத்தாண்டு கொண்டாட்டம் : பறக்கும் நடிகைகள்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:25 IST)
மும்பை தாஜ் நட்சத்திர ஹோட்டலில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவத்தால் பல்வேறு நாடுகளிலும் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு பாதுகாப்பு அதிகரித்திருப்பதோடு பல்வேறு கண்டிஷன்களும் போட்டிருக்கிறது அரசு. அந்த கண்டிஷன் சென்னை மற்றும் தமிழ்நாட்டு ஹோட்டல்களுக்கும் போட்டிருக்கிறார்கள்.

அதுவும் வரும் புத்தாண்டு தினத்தில் ஏகப்பட்ட ஹோட்டல்களில் பல்வேறு பார்ட்டிகள், ஆட்டம் பாட்டம், கொண்டாட்டங்கள் இருக்கும் என்பதால் முன்கூட்டியே ஒவ்வொரு ஹோட்டலுக்கும் கண்டிஷன் அச்சடித்து அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், சென்ற ஆண்டில் நடந்த புத்தாண்டு நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மேடை சரிந்து மூன்று பேர் உயிரிழந்தனர். இதையெல்லாம் தடுக்கும் விதமாகத்தான் கடும் எச்சரிக்கை விட்டிருக்கிறது அரசு.

இதுபோன்ற புத்தாண்டு தின ஆட்டம் பாட்டங்களில் கலந்துகொண்டு ஒரே இரவில் பல லட்சங்களை சம்பாதிக்கும் சில இளம் நடிகைகள் கலக்கத்தில் இருக்கின்றனர்.

இருப்பினும் இந்தியாவில்தானே இத்தனை கெடுபிடி. வெளிநாடுகளில் ஆடலாமே என முடிவெடுத்த சில நடிகைகள் கூட்டமாக சேர்ந்து அடுத்த வாரம் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். எது எப்படியோ வருவது ரூபாயாக இருந்தாலும், டாலராக இருந்தாலும் ஒன்றுதானே.

Share this Story:

Follow Webdunia tamil