Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விருது நாயகியின் ஆதங்கம்

Advertiesment
விருது நாயகியின் ஆதங்கம்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:21 IST)
பருத்தி வீரன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வாங்கிய பிரியாமணி, அதற்குப் பின்னால் மிகவும் மாறிப் போய்விட்டார்.

அதிகமான சம்பளம் கேட்பதோடு கதை சொல்ல வரும் புதுமுக இயக்குனர்களை இன்று, நாளை என்று அலையவிடுகிறார். அதனால் பல இயக்குனர்கள் பிரியாமணி மேல் கடுப்புடன் இருக்கின்றனர்.

அப்படியே கதை கேட்டு ஒப்புக்கொண்டாலும், தன் மீதுள்ள நல்ல நடிகை என்கிற இமேஜ் கெட்டுப் போகக்கூடாது என்று கண்டிஷன் போடுவதோடு கதை‌யில் கரெக்சனும் செய்யச் சொல்கிறார்.

அப்படியிருந்தும் இன்றைக்குள்ள பெரிய நடிகர்களான அஜித், விஜய், விக்ரம் போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர தூது விட்டும் சரியாக ஒர்க்கவுட் ஆகவில்லை. இதனால் தற்போது அதிரடியாய் ஒரு முடிவும் செய்துள்ளார்.

அதாவது இதுபோன்ற பெரிய நடிகர்களுடன் நடிப்பதென்றால் சம்பளத்தைக் கூட பாதியாக குறைத்துக் கொள்வேன் என்று கூறி வருகிறார்.

ஆனாலும், அவர்களிடமிருந்தோ, அவர்களை இயக்கும் இயக்குனர்களிடமிருந்தோ அழைப்பு வரவில்லை என்பதால் அப்செட்டாகி இருக்கிறார் மணி. ஒரு வேளை விருது வாங்கியது கூட சற்று வயதானவளாக காட்டிவிட்டதோ என்றும் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil