தயாரிப்பு, விநியோகம், திரையரங்கு நிர்வாகம் என்றிருந்த பிரமிட் சாய்மீரா நிறுவனம் மேலும் இரு துறைகளில் காலடி பதிக்கிறது.
அடுத்த வருடம் ஜனவரி முதல் சாய்மீரா எஃப்.எம். என்ற பெயரில் வானொலி சேவையை தொடங்குகிறது பிரமிட் சாய்மீரா நிறுவனம். அத்துடன் பிரமிட் ஆடியோ என்ற ஆடியோ நிறுவனமும் தொடங்கப்பட உள்ளது.
சில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணாவின் ஏன் இப்படி மயக்கினாய் படத்தின் ஆடியோ உரிமையை பிரமிட் ஆடியோ வாங்கியுள்ளது. மேலும் பாலாவின் நான் கடவுள் படத்தின் ஆடியோவும் பிரமிட் ஆடியோ வெளியிட இருப்பதாக நமபத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விளம்ரங்கள் மூலமே ஒரு படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பதுதான் பிரமிட் சாய்மீரா எஃப்.எம். தொடங்க காரணம் என்கிறார்கள்.
விரைவில் தொலைக்காட்சி சானலையும் எதிர்பார்க்கலாமா?