Publish Date: Tue, 06 Jan 2009 (22:18 IST)
Updated Date: Tue, 23 Dec 2008 (15:32 IST)
மகராசி தொலைக்காட்சி தொடரை இயக்கிய என். ப்ரியனின் முதல் படம் மியாவ் மியாவ் பூனைக்குட்டி. வித்தியாசமான தலைப்பை போலவே படத்தின் கதையும் வித்தியாசமாக இருக்கும் என்கிறார் ப்ரியன்.
இந்தப் படத்தில் கர்நாடகாவைச் சோர்ந்த சி.எஸ். பாலு என்ற இசையமைப்பாளரை அறிமுகப்படுத்துகிறார்கள். படத்தின் பாடல் கம்போஸிங் தற்போது நடந்து வருகிறது.
ஆக்சன், காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராக இருக்கும் மியாவ் மியாவ் பூனைக்குட்டியில் நடிக்கும் ஹீரோ யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. திறமையான புதுமுகங்களை வலைவீசி தேடி வருகிறார் ப்ரியன்.
அதிர்ஷ்டம் யாருக்கு அடிக்கிறதோ?