Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பயிற்சிப் பட்டறையில் சசி

Advertiesment
பயிற்சிப் பட்டறையில் சசி
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:18 IST)
நிழல் இதழ் நடத்தும் குறும்பட, ஆவணப்பட பயிற்சிப் பட்டறை சேலத்தை அடுத்த வளசையூ‌ரில் வரும் 25 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை நடக்கிறது.

குறும்படம், ஆவணப்படம் குறித்து இங்கு கற்றுத் தருவதுடன் நடிப்பு, இயக்கம், திரைக்கதை, எடிட்டிங், ஒளிப்பதிவு குறித்தும் சொல்லித்தரப்படும்.

இந்த பயிற்சிப் பட்டறையில் இயக்கம் குறித்தும், இலக்கியத்தை திரைப்படமாக்குவதில் உள்ள சவால்கள் குறித்தும் பேச இருக்கிறார், இயக்குனர் சசி. பெ‌ரியார் படத்தை இயக்கிய ஞானராஜசேகரனும் இந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

மேலும் விவரங்களுக்கு நிழல் ஆசி‌ரியர் திருநாவுக்கரசை 94444 84868 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil