கஸ்தூரியை நினைவிருக்கிறதா? சினிமா கசந்து பீல்டை விட்டே விலகிப் போனவர் மீண்டும் வந்திருக்கிறார்.
அஜ்மல், பசுபதி நடிக்கும் தநா 07 அல 4777 படத்தின் தயாரிப்பு வேலைகளை கஸ்தூரிதான் கவனித்து வருகிறார். அத்துடன் செல்வாவின் நூற்றுக்கு நூறு படத்தில் ஐந்து ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார்.
சினிமாவை விட்டு விலகியபோது எப்படி இருந்தாரோ அதேபோல் திரும்பி வந்திருப்பதால் கஸ்தூரி காட்டில் நல்ல மழை. நூற்றுக்கு நூறு படத்தில் ஒப்பந்தமான கையோடு நாகேந்திர பிரசாத் நடிக்கும் காதல் டு கல்யாணம் படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தப் படத்தில் திவ்யா கதாநாயகியாக நடிக்கிறார்.