Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆனந்தபுரத்து வீட்டின் அவஸ்தை

Advertiesment
ஆனந்தபுரத்து வீட்டின் அவஸ்தை
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:16 IST)
தென்னை மரத்தில் தேள் கொட்டியதற்கு பனை மரத்தில் நெறி கட்டியதை அனுபவ‌ப்பூர்வமாக உணர்ந்திருக்கிறது ஆனந்தபுரத்து வீடு பட யூனிட்.

ஷங்கர் தயா‌ரிப்பில் நாகா இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோவை அருகே நடந்து வருகிறது. நேற்று முன்தினம் போ‌லியோ சொட்டு மருந்து கொடுத்ததில் குழந்தைகள் இறந்ததாக வதந்தி கிளம்பிதல்லவா?

ஆனந்தபுரத்து வீடு படப்பிடிப்பு நடந்த கிராமத்தில் உள்ளவர்களும் இந்த வதந்தியால் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போது கா‌ரில் வந்த ஒருவர் தாக்கப்பட்டிருக்கிறார். மறியல் செய்தவர்களும் தாக்கப்படடவரும் வேறு வேறு சாதி என்பதால் உடனடியாக சாதிக் கலவரம் வெடித்திருக்கிறது.

அதனைத் தொடர்ந்து கிராமத்தில் போலீஸ் குவிக்கப்பட்டதுடன் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்புக்காக வந்தவர்களும் அங்கிருந்து வெளியேற முடியாத ூழல் ஏற்பட்டது.

சகஜநிலை திரும்பிய பிறகு மீண்டும் படப்பிடிப்பை தொடர திட்டமிட்டுள்ளார் இயக்குனர் நாகா.

Share this Story:

Follow Webdunia tamil