Publish Date: Tue, 06 Jan 2009 (22:13 IST)
Updated Date: Mon, 22 Dec 2008 (18:22 IST)
விஜயகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு, படத்தின் கதை பிடித்து கால்ஷீட்டை அள்ளிக் கொடுத்த படம், எங்கள் ஆசான்.
இதில் வங்கி அதிகாரியாக வரும் விஜயகாந்த், மக்கள் பணத்தை யார் யார் கொள்ளையடிக்கிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறாராம். அரசாங்கம் படத்தில் நடித்த ஷெரில் பிரிண்டோ படத்தின் ஹீரோயின். அரசியல்வாதியாக நடித்துள்ளார்.
படத்தில் விக்ராந்தும் உண்டு. கலைமணி படத்தை இயக்கியுள்ளார். விஜயகாந்த் விக்ரமன் இயக்கத்தில் நடிக்கும் மரியாதை படத்தில் மருந்துக்குக்கூட அரசியல் வசனம் கிடையாதாம்.
அதை சரிகட்டுவதுபோல் எங்கள் ஆசானில் தனது அரசியல் எதிரிகளை ஹை டெசிபல் குரலில் விளாசியிருக்கிறாராம விஜயகாந்த்.
பேசுறது சரி... பார்க்கிற மாதிரி ஏதாவது இருக்குமா?