Publish Date: Tue, 06 Jan 2009 (22:10 IST)
Updated Date: Mon, 22 Dec 2008 (18:06 IST)
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார், தனுஷ். உடன் பாடியிருப்பது அவரது மனைவி ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யா பாடுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே விசில் படத்தில் பாடியிருக்கிறார். தனுஷின் பாடல் பிரவேசம் நிகழ்ந்தது புதுப்பேட்டை படத்தில். இவர்கள் இருவரையும் இணைத்திருக்கிறது ஆயிரத்தில் ஒருவன்.
ஜி.வி. பிரகாஷ் இசையில் வைரமுத்து எழுதிய உன் மேல ஆசதான் பாடலை இருவரும் இணைந்து பாடினர். யுவன் ஷங்கர் ராஜா - செல்வராகவன் நட்புடன் இருந்தவரை அனைத்துப் பாடல்களையும் நா. முத்துக்குமார் எழுதிவந்தார்.
இந்த இணை பிரிந்த பிறகு நா. முத்துக்குமாரையும் கழற்றிவிட்ட செல்வராகவன், வைரமுத்துவை வைத்து ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் அனைத்தையும் எழுதியிருக்கிறார்.
கவிஞர் மீது என்ன கோபமோ.