Publish Date: Tue, 06 Jan 2009 (22:09 IST)
Updated Date: Mon, 22 Dec 2008 (15:36 IST)
இயக்குனர் வெங்கட் பிரபு நல்ல பாடகர் என்பது சிலருக்கே தெரியும். நல்ல என்றால் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடும் அளவுக்கு என்று பொருள். ஏ.ஆர். இசையில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் இடம்பெற்ற ஒரு நண்பன் இருந்தால் பாடலை பாடியவர் வேறு யாருமல்ல, வெங்கட் பிரபுதான்.
இந்தப் பாடல் தவிர, துள்ளுவதோ இளமை, சென்னை 28 ஆகிய படங்களிலும் பாடியிருக்கிறார். படம் இயக்க ஆரம்பித்த பிறகு பாடுவதை நிறுத்திக் கொண்டவர், தம்பிக்காக தனது கொள்கையை தளர்த்தியிருக்கிறார்.
வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி இசையமைக்கும் அதே நேரம் அதே இடம் படத்தில் நா. துத்துக்குமார் எழுதிய,
நம்ம ஊரு சென்னையிலே
நாள்தோறும் வீதியிலே
பல நூறு பொண்ணுங்களை பார்த்தேனே...
பாடலைப் பாடினார்.