Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இணையதளத்தில் வெளியான வில்லு படம்

Advertiesment
இணையதளத்தில் வெளியான வில்லு படம்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:08 IST)
ஒரு படத்தில், கமலின் மருதநாயகம் எடுத்தவரை இருக்கு பார்க்கறியா என்று கேட்பார் விவேக். அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறது, வில்லு படத்துக்கு ஏற்பட்டிருக்கும் விபத்து.

சிவா‌ஜி படம் தயா‌ரிப்பில் இருக்கும்போதே அதன் பாடல் காட்சிகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதேபோல் வாரணம் ஆயிரம் படத்தின் சில காட்சிகளையும் உலக வரலாற்றில் முதல் முறையாக யாரோ இணையதளத்தில் வெளியிட்டனர். இப்போது வில்லுவின் முறை.

பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் இப்படத்தின் சண்டைக் காட்சியொன்று சில இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை எற்படுத்தியிருக்கிறது. படத்தின் வேறு சில காட்சிகளையும் தமிழ்டியூப் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.

பொங்கலுக்கு வெளியாகும் படத்தை உலக வரலாற்றில் முதல் முறையாக யாரோ இணையதளத்தில் ‌ரிலீஸ் செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil