கவுண்டமணி, செந்தில் படங்களுக்கு காமெடி ட்ராக் எழுதியவர் வீரப்பன். இவரது மகன் ஆனந்த் வீரப்பன் நடிக்க வருகிறார்.
தீயவர்களை அழிக்க அவதாரம் எடுப்பேன் என்ற கிருஷ்ணரின் கீதை வரியையும், நள்ளிரவில் நகையுடன் ஒரு இளம்பெண் எப்போது பயமில்லாமல் செல்கிறாரோ, அப்போதுதான் சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்ற காந்தியின் வார்த்தையையும் கருவாக கொண்டு ஆனந்த் வீரப்பன் அறிமுகமாகும் படம் தயாராகிறது. படத்தின் பெயர் புதன்.
நந்தினி என்ற புதுமுகம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.