Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நயன்தாரா பிடிவாதம்

Advertiesment
நயன்தாரா பிடிவாதம்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:05 IST)
நடிக்கவும் மாட்டேன், வாங்கிய அட்வான்ஸை திருப்பியும் தர மாட்டேன் என அடம்பிடிக்கிறார் நயன்தாரா. இதனால் அவர் மீது தயா‌ரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் தெ‌ரிவிக்கப்பட்டுள்ளது.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயா‌ரிக்கும் பையா படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமானதும், கார்த்தி நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு முடிவடையாததால் பையா படம் தள்ளிப் போவதும் அனைவரும் அறிந்த பழங்கதை.

கார்த்தியின் தாமதத்தால் நயன்தாரா அளித்த கால்ஷீட்கள் வீணானது. மேலும், நயன்தாராவுக்கு முதலில் பேசிய ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் சம்பளத்தில் கணிசமான அளவு குறைக்க கேட்டுக் கொண்டார் லிங்குசாமி. இதற்கு ஒத்துக்கொள்ளாத நயன்தாரா படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

நயன்தாராவுக்குப் பதில் தற்போது பையாவில் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நயன்தாரா படத்திலிருந்து விலகியதால் பையாவுக்காக அவருக்கு கொடுத்த 25 லட்சம் அட்வான்ஸை திருப்பி கேட்டிருக்கிறார் லிங்குசாமி. என்னுடைய கால்ஷீட்டை வீணாக்கிவிட்டீர்கள், அதனால் அட்வான்ஸை திருப்பித்தர முடியாது என மறுத்திருக்கிறார் நயன்.

நயன்தாராவிடமிருந்து பணத்தை பெற்றுத் தரும்படி தயா‌ரிப்பாளர்கள் சங்கத்தை அணுகியிருக்கிறார் லிங்குசாமி. பணத்தை திருப்பி கொடுங்கள், இல்லையேல் படத்தில் நடித்துக் கொடுங்கள் என்பதாகவே சங்கத்தின் தீர்ப்பு இருக்கும். இந்த இரு சாய்ஸையும் நயன்தாரா நிராக‌ரித்தால் அவர் மீது ரெட் கார்ட் போடப்படலாம் என்கிறார்கள்.

தற்போது மலையாள படத்தின் படப்புக்காக கேரளாவில் இருக்கிறார் நயன்தாரா.

Share this Story:

Follow Webdunia tamil