சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர். மன்மதன் படத்தில் தல வாழ்க என கோஷமே போட்டிருக்கிறார். சிலரை போல் ரசிப்பதை வெளிப்படுத்த தயங்கும் பழக்கமெல்லாம் இவரிடம் கிடையாது.
தனது சிலம்பாட்டத்தைப் பார்க்க அஜித்துக்கு அழைப்பு அனுப்பினார் சிம்பு. ரசிகரின் அழைப்பாயிற்றே... தவிர்க்க முடியுமா?
சென்னை ஃபோர் பிரேம் திரையரங்கில் அஜித்துக்காக சிலம்பாட்டம் பிரத்யேக காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. நண்பர்களுடன் வந்த அஜித் படத்தை ரசித்துப் பார்த்ததுடன் சிம்புவை கட்டிப்பிடித்து பாராட்டினார்.
உச்சி குளிர்ந்து போயிருக்கிறார் சிம்பு.