பொங்கலுக்கு திரையரங்கு பிடிக்கும் வேலைகள் துரிதமடைந்துள்ளன. டிசம்பரில் திரைக்குவர சாத்தியப்படாதவர்கள் பொங்கலுக்கு முட்டிமோதுவதால் ஜனவரி வெளியாகும் படங்களின் எண்ணிக்கை இரண்டு டஜனை தொடுகிறது.
தெலுங்கில் வெளியான காம்யம் படத்தின் தமிழ் ரீ-மேக், காதல்னா சும்மா இல்ல பொங்கலுக்கு வெளியாகிறது. ரவிகிருஷ்ணாவுடன் தெலுங்கு நடிகர் சாவானந்த் நடித்திருக்கும் இந்தப் படத்தை இளங்கண்ணன் இயக்கியுள்ளார்.
காம்யத்தைப் பார்த்து தான் பிரமித்ததாகவும், படத்தின் கிளைமாக்ஸ் யாராலும் யூகிக்க முடியாது, படம் பார்க்கும் அனைவரையும் கலங்க வைத்துவிடும் என்று கூறியிருக்கிறார் ரவி கிருஷ்ணா. இதே கருத்தை யூனிட்டில் உள்ளவர்கள் அனைவரும் கூறியிருப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு நிறையவே இருக்கிறது.
கமாலினி முகர்ஜி சாவானந்தின் ஜோடியாக இதில் நடித்துள்ளார்.