Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தயா‌ரிப்பாளரை காப்பாற்றிய சிலம்பாட்டம்

Advertiesment
தயா‌ரிப்பாளரை காப்பாற்றிய சிலம்பாட்டம்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:03 IST)
லஷ்மி மூவி மேக்கர்ஸுக்கு நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஒரு ஹிட் திரைப்படம். கோடீஸ்வரர்களை லட்சாதிபதிகளாக்கும் ராசிக்காரர் என கிண்டலடிக்கப்படும் சிம்புவின் படம் இதனை சாதித்திருப்பது, உண்மையிலேயே பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டிய சமாச்சாரம்.

சிம்புவின் வல்லவன், காளை என சமீபத்திய படங்கள் சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை. ஆர்ப்பாட்டமாக தொடங்கப்பட்ட கெட்டவன் பாதியிலேயே கைவிடப்பட்டது. கண்டிப்பாக ஒரு வெற்றியை கொடுத்தாக வேண்டும் என்ற நிலையில் அவர் நடித்தப் படம், சரவணன் இயக்கிய சிலம்பாட்டம். இதனை தயா‌ரித்த லஷ்மி மூவி மேக்கர்ஸும் வெற்றியை ருசித்து பல வருடங்களாகிறது.

நேற்று முன்தினம் வெளியான இப்படம் இதுவரையான சிம்புவின் ஓபனிங் ரெக்கார்டை முறியடித்துள்ளது. ஏபிசி என அனைத்து சென்டர்களிலும் படம் அமோக வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

சிலம்பாட்டத்தை வாங்க யாரும் முன்வராததால் மூன்று ஏ‌ரியாக்கள் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் தயா‌ரிப்பாளர்களே சொந்தமாக படத்தை வெளியிட்டனர். படத்திற்கு பண மழை கொட்டுவதால் படத்தை வாங்க மறுத்தவர்கள் கை நழுவிய அதிர்ஷ்டம் குறித்து கவலையுடன் இருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil