Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீமானுக்கு காவல்

Advertiesment
சீமானுக்கு காவல்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:02 IST)
விடுதலைப் புலிகளை ஆத‌ரித்து பேசிதாக கைது செய்யப்பட்ட இயக்குனர் சீமானை 31 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஈரோட்டில் கடந்த 14 ஆம் தேதி நடந்த தமிழ் தேச பொதுவுடமை கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் சீமா‌ன் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தனது உடன்பிறந்த சகோதரர் என பேசியதாகவும், முன்னாள் பிரதமர் ரா‌‌ஜீவ் காந்தியையும், சோனியா காந்தியையும் தரக்குறைவாக திட்டியதாகவும் ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இயக்குனர் சீமானுடன் கொள‌த்தூர் மணி, மணியரசன் ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டார். மாயாண்டி குடும்பத்தார் படப்பிடிப்பில் இருந்த சீமானையும் காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையில் மணியரசன் கைது செய்யப்பட்டார்.

நேற்று மாலை இவர்கள் ஈரோடு நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மூவரையும் வரும் 31 ஆம் தேதிவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil