Entertainment Film Featuresorarticles 0812 20 1081220049_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழரசன் திருமா

Advertiesment
தமிழரசன் தொல் திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:01 IST)
அரசியல் அனலுக்கு நடுவே அ‌ரிதாரம் பூசுவதையும் சிறப்பாக செய்து வருகிறார், விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன்.

இவர் நடித்த எந்தப் படமும் பெ‌ரிதாக பேசப்பட்டதில்லை. கலகம் என்ற பெய‌ரில் இவர் கதாநாயகனாக நடித்த படம் ஆரம்பகட்டத்திலேயே கைவிடப்பட்டது. அரசியலை கவனிக்காமல் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு.

இந்த விமர்சனங்களை பொருட்படுத்தாமல், கட்சி கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல திரைப்படம் சிறந்த ஊடகம் என்ற உறுதியுடன் தொடர்ந்து நல்ல கதைகளை தேடி வருகிறார் திருமா. அப்படியான தேடலில் கிடைத்திருக்கு‌ம் படம்தான், தமிழரசன்.

வின்சென்ட் செல்வா இயக்கும் தமிழரசனில் தனி கதாநாயகனாக நடித்து வருகிறார் திருமாவளவன். நல்ல கதைகள் தனது கொள்கையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

வரவேற்க வேண்டிய முடிவு.

Share this Story:

Follow Webdunia tamil