நடிகர் ரஞ்சித் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ரயிலு. ஏ.கே. மீடியா விஷன் தயாரிக்கும் ரயிலு மலையாள படத்தின் ரீ-மேக்.
தமிழ் நடிகரான ரஞ்சித் மலையாளத்தில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். மோகன்லாலுடன் இவர் நடித்த நாட்டு ராஜாவு, மம்முட்டியுடன் நடித்த ராஜ மாணிக்கம் ஆகியவை கேரளாவில் சூப்பர் ஹிட்டான படங்கள். வித்தியாசமான வில்லன் வேடம் என்றால் மலையாள படவுலகில் நினைவுவரும் பெயர் ரஞ்சித்துடையதாகவே இருக்கும்.
மலையாளத்தில் திலீப்பும், மனோஜ் கே. ஜெயனும் இணைந்து நடித்த படம் சல்லாபம். இதனை ரயிலு என்ற பெயரில் எழுதி, இயக்கி, நடிக்கிறார் ரஞ்சித்.
பூஜை, தொடக்கவிழா எதுவும் இன்றி படப்பிடிப்பை தொடங்கி, தொடர்ந்து நடத்தி வருகிறார் ரஞ்சித்.