Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சங்கமித்ரா சலசலப்பு

Advertiesment
சங்கமித்ரா சலசலப்பு
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:59 IST)
இளமையில் ஒரு பெண்ணிற்கு தவறிழைக்கும் ஒருவ‌ன், காலம் தந்த அனுபவத்தால் அந்த தவறை உணர்ந்து, திருமணம் செய்யாமல் அந்த பெண்ணிற்கு காலம் முழுக்க உதவியாக இருக்கும் கதை சங்கமித்ரா.

இதில் 16 வயது முதல் 68 வயதுவரை ஒருவனின் வாழ்க்கை சொல்லப்படுகிறது. இந்த லைஃப் டைம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சத்யரா‌ஜ்.

இந்தப் படத்துக்காக, சூர்யா வாரணம் ஆயிரம் படத்தில் 16 வயது பையனாக மாறியதுபோல் சத்யராஜும் மாறப்போகிறார் என பெ‌ரிய குண்டாக யாரோ தூக்கிப் போட ஆடிப் போய்விட்டது திரையுலகம். ஆடாத ஒரேயொருவர் சத்யரா‌ஜ்.

நம்ம ஏஜுக்கு 16 எல்லாம் எப்பிடிப்பா முடியும் என தனக்கேயு‌ரிய நையாண்டியுடன் சொன்னவர், அதற்கெல்லாம் இயக்குனர் வேறு ஆள் வைத்திருக்கிறார் என்றார். தற்போது சத்யரா‌‌ஜின் முகச்சாயலில் 16 வயது பையனாக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

பேசாமல் சிபிராஜை முயன்று பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil