Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஷ்ணு‌‌ஜியின் ஒரே மனசு

Advertiesment
விஷ்ணு‌‌ஜியின் ஒரே மனசு
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:58 IST)
பணத்தை பெ‌ரிதாக நினைக்கும் அப்பா. சொந்தங்களை பெ‌ரிதாக மதிக்கும் மகன். இவர்களுக்குள் நடக்கும் கருத்து மோதல்களை காமெடியாக சொல்லும் படம் ஒரே மனசு.

வெறும் கருத்து சொன்னால் இந்த காலத்தில் யார் கேட்பார்கள்? அதனால் படத்தில் சுவாரஸியமான காதல் ஜோடி ஒன்றும் வருகிறது. சொந்த மாமன் மகளை மணக்க பி‌ரியப்படுகிறார் மகன். அப்பா அதற்கு தடா போடுகிறார்.

அப்பாவை வழிக்கு கொண்டுவர தெருவில் குப்பை பொறுக்கிற சிலரை சிங்கப்பூர் ‌ரிட்டனாக தயார் செய்து ஒரு ‌‌ஜிலு ‌‌ஜிலு இளம் பெண்ணுடன் தனது வீட்டிலேயே தங்க வைக்கிறார் மகன்.

இந்த சிங்கப்பூர் ‌ரிட்டன்கள் செய்யும் அலம்பல் அடிவயிறை பதம்பார்க்கும் அளவுக்கு நகைச்சுவையாக எடுத்திருக்கிறார்களாம். கிரேன் மனோகர், காதல் சரவணனுடன் நிஜமாக தெருவில் குப்பை பொறுக்கும் சிலரையும் நடிக்க வைத்துள்ளாராம் இயக்குனர் விஷ்ணு‌‌ஜி.

புதுமுகம் கஜனும், அனுமிதாவும் காதலர்களாக நடித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil