Publish Date: Tue, 06 Jan 2009 (21:58 IST)
Updated Date: Fri, 19 Dec 2008 (17:25 IST)
குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் படத்தை தயாரித்துவரும் சரணின் கேப்பிடல் ஃபிலிம் ஒர்க்ஸின் அடுத்த தயாரிப்பு, ஆரண்ய காண்டம்.
ஆக்சன் படமான இதில் சம்பத், ரவிகிருஷ்ணா நடிக்கின்றனர். சென்னை 600 028, குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் படங்களை தொடர்ந்து ஆரண்ய காண்டத்திற்கும் இசையமைக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா.
நேற்று ஆரண்ய காண்டத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. ரவிகிருஷ்ணா, சம்பத், சரண், கங்கை அமரன், படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
படத்தின் சண்டைக் காட்சிகளை சூப்பர் சுப்பராயன் அமைக்கிறார்.