Publish Date: Tue, 06 Jan 2009 (21:56 IST)
Updated Date: Fri, 19 Dec 2008 (15:49 IST)
இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரின் மகன் பார்த்தி பாஸ்கர் இயக்கும் இரண்டாவது படம் அர்ஜுனன் காதலி. சுப்ரமணியபுரம் ஜெய் இதில் நாயகனாக நடிக்கிறார்.
பார்த்தி பாஸ்கர் இசையமைப்பாளர் தேவாவின் மருமகன். அர்ஜுனன் காதலிக்கு இசையமைப்பவர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா. படத்தின் நாயகன் ஜெய், தேவாவின் தம்பி மகன். கலப்படமில்லாத குடும்பப் படமான இதில் ஷம்மு ஹீரோயினாக நடிப்பதாக கூறப்பட்டது.
ஷம்மு வெளிநாட்டில் வசிப்பவர். பாவாடை தாவணி கதாபாத்திரத்துக்கு அவர் ஒத்துவருவாரா என்ற சந்தேகம் எழுந்ததால் அவரை நீக்கிவிட்டு முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் ஹீரோயின் பூர்ணாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஷம்மு தற்போது மோசர் பேர் தயாரிக்கும் மயிலு மற்றும் கரணின் மலையன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.