Publish Date: Tue, 06 Jan 2009 (21:54 IST)
Updated Date: Fri, 19 Dec 2008 (15:43 IST)
நயன்தாரா கவர்ச்சியாக நடித்தப் படம் என்ற விளம்பரத்துடன் விரைவில் வெளிவர இருக்கிறது துபாய் ராணி. இந்தப் படத்தில் எப்போது நயன்தாரா நடித்தார் என்று குழப்பமாக இருக்கும். உங்கள் மெமரியை குடைய வேண்டாம். துபாய் ராணி தெலுங்கிலிருந்து தமிழுக்கு வரும் டப்பிங் படம்.
ரவி தேஜா ஜோடியாக நயன்தாரா நடித்த படத்தையே துபாய் ராணி என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். அங்கு இதன் பெயர் துபாய் சீனு. நயன்தாராவின் கவர்ச்சியை மடடும் நம்பி இங்கு வெளியிடுவதால் சீனு ராணியாகிவிட்டது.
இண்டியன் இமேஜ் வழங்க சாரதா ரெட்டி படத்தை தயாரித்துள்ளார். சீனு வைட்லர் படத்தின் இயக்குனர். ரெண்டு படத்தில் நடித்த அனுஷ்காவும் துபாய் ராணியில் நடித்துள்ளார்.