Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளையராஜாவை கவர்ந்த நான் கடவுள்

Advertiesment
இளையராஜாவை கவர்ந்த நான் கடவுள்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:52 IST)
பாலாவின் நான் கடவுள் படத்தின் பின்னணி இசை சேர்ப்பில் பிஸியாக இருக்கிறார் இளையராஜா. இதுவரை நான் இசையமைத்த படங்களில் மிகச் சிறந்த படம் நான் கடவுள் என நெகிழ்ந்திருக்கிறார் மேஸ்ட்ரோ.

இந்தப் படத்தின் பின்னணி இசை அமைக்க பிரத்யேகமான மனநிலை தனக்கு தேவைப்பட்டதாகவும், பாலாவை தவிர்த்து வேறு யார் இந்தப் படத்தை இயக்கியிருந்தாலும் இவ்வளவு குறுகிய காலத்தில் படத்தை முடித்திருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

நான் கடவுள் மூலம் தனது முந்தைய படங்களான சேது, நந்தா, பிதாமகன் ஆகியவற்றின் சாதனையை பாலா கடந்து விட்டதாகவும், இப்படியொரு கதையை வேறு யாராலும் எடுக்க இயலாது என்றும் மனம் திறந்து பாராட்டியுள்ளார் இளையராஜா.

ஆர்யா, பூஜநடித்திருக்கும் இந்தப் படம் பிப்ரவ‌ரியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil