Publish Date: Tue, 06 Jan 2009 (21:49 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)
ஒரு பாடலுக்கு ஆடிக்கொண்டிருந்த மூமைத்கானை தனி ஹீரோயினாக்கிய பெருமை ஆந்திர தேசத்தை சாரும். காயத்ரி ஐபிஎஸ் ஆக அவர் போட்ட ஆக்சன் ஆட்டத்தை தமிழிலும் டப் செய்து வெளியிட்டார்கள்.
இவர் ஹீரோயினாக நடிக்கும் நேரடி தமிழ்ப் படம் மச்சக்கன்னி. கடவுள், காதல் அரங்கம் போன்ற சர்ச்சைக்குரிய படங்களை எடுத்த வேலு பிரபாகரனின் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவில் மச்சக்கன்னி தயாராகிறது.
சதீஷ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஜே.டி. சக்ரவர்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஷ்ணுவர்தனின் சர்வம் படத்தில் இவர் வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மச்சக்கன்னி பெயர் படத்தின் கதைக்கு பொருத்தமில்லை என்பதால் மாயக்கன்னி என மாற்றி உள்ளதாக தெரிவித்தார் தயாரிப்பாளர் சதீஷ்.