Publish Date: Tue, 06 Jan 2009 (21:48 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)
பாபு கே. விஸ்வநாத் இயக்கத்தில் கரண் நடிக்கும் கந்தா படத்தின் சேட்டிலைட் உரிமை கைமாறுகிறது.
ஏராளமான சிறுகதைகள், நாவல்கள் எழுதிய திருவாரூர் பாபு, கே. விஸ்வநாத் என்ற பெயரில் இயக்கும் முதல் படம் கந்தா. தஞ்சை பின்னணியில் தயாராகிவரும் இப்படத்தின் அறுபது சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அடுத்த மாதம் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
கந்தாவின் சேட்டிலைட் உரிமையை 75 லட்சத்திற்கு ஸீ தமிழ் சேனல் வாங்கியிருந்தது. படத்தின் தயாரிப்பாளர் அந்தப் பணத்தை வட்டியுடன் திருப்பி செலுத்தி, சேட்டிலைட் உரிமையை மீண்டும் வாங்கி சன் தொலைக்காட்சிக்கு விற்றுள்ளார்.
சன் 75 லட்சத்தைவிட அதிக பணம்தர முன்வந்ததால் உரிமையை சன்னுக்கு அளித்துள்ளார் தயாரிப்பாளர். இந்த கைமாறிய உரிமையால் தயாரிப்பாளருக்கு அரை கோடிக்கும்மேல் லாபம் என்கிறார்கள்.