Publish Date: Tue, 06 Jan 2009 (21:47 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)
உண்மை சம்பவங்களை மட்டும் திரைப்படமாக்கிவரும் இயக்குனர் சஞ்சய்ராம், மம்முட்டி, சரத்குமார் இணைந்து நடிக்கும் படத்தை விரைவில் இயக்குகிறார்.
பூவா தலையா மற்றும் ஷாம், பிரகாஷ்ராஜ் இணைந்து நடிக்கும் படங்களை இயக்கிவரும் சஞ்சய்ராமின் அடுத்த படமாக சரத், மம்முட்டி இணையும் படம் இருக்கும். இதில் சரத்குமார் ஜோடியாக நவ்யா நாயர் நடிக்கிறார்.
மலையாளத்தில் மம்முட்டி, சரத்குமார் நடிக்கும் சரித்திர படமான பழஸிராஜாவிலும் நவ்யா நாயர் நடிக்கிறார். இந்த மூவரும் அடுத்து தமிழ் படத்திலும் ஒன்றிணைந்து நடிப்பது எதிர்பாராத ஆச்சரியம்.
படத்தை சஞ்சய்ராமின் லிங்கம் தியேட்டர்ஸ் தயாரிக்க உள்ளது.