Publish Date: Tue, 06 Jan 2009 (21:46 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)
வில்லு படத்தில் பல ஆச்சரியங்கள் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. எட்டணா இருந்தால் எட்டூரு என் பாட்டு கேட்கும் என இளையராஜா இசையில் பாடிய வடிவேலு, வில்லு படத்தில் தேவி ஸ்ரீபிரசாத் இசையில் ஒரு பாடல் பாடியுள்ளார். அவரது ஜோடி கோவை சரளாவும் ஒரு பாடல் பாடியிருப்பது எதிர்பாராத ஆச்சரியம்.
அதேபோல் குஷ்பு, விஜயுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதற்குமுன் மீனா, சிம்ரன், ரோஜா ஆகியோருடன் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கும் விஜய், குஷ்புவுடன் நடனமாடுவது இதுவே முதல்முறை.
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் ஆகிய பொறுப்புகளுடன் புதிதாக பாடலாசிரியர் என்ற தகுதியையும் இந்த படத்தின் மூலம் சம்பாதித்திருக்கிறார் பிரபுதேவா. வில்லு படத்தில் இவரது கவித்துவத்தில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது.
படம் வெளியாகும் போது இன்னும் பல ஆச்சரியங்களுக்கு ரசிகர்கள் ஆளாகலாம்.