Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தயாரிப்பாளர் பேரரசு

Advertiesment
தயாரிப்பாளர் பேரரசு
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:38 IST)
இப்போதெல்லாம் முதல் படத்திலேயே தயாரிப்பாளராகி விடுகிறார்கள். அந்த வகையில் பேரரசு டூ லேட்! ஏழாவது படத்தில்தான் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார்.

கவிதாலயாவுக்காக இவர் இயக்கிய திருவண்ணாமலை இந்த மாதம் திரைக்கு வருகிறது. அர்ஜுன் நடித்திருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை வழக்கம்போல பேரரசே எழுதியுள்ளார். இசை ஸ்ரீகாந்த் தேவா.

அடுத்து பரத் நடிக்கும் திருத்தணி படத்தை இயக்குகிறார் பேரரசு. இந்தப் படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்களுடன் (கெஸ்ட் அப்பியரன்சும் உண்டு) தயாரிப்பாளர் சுமையையும் பேரரசுவே ஏற்றுக் கொண்டிருக்கிறார். இவரது மேஜிக் மைண்ட் தயாரிப்பு நிறுவனம் திருத்தணியை தயாரிக்கிறது.

பழனிக்குப் பிறகு, பிரபல நடிகைகளின் பின்னால் போகமாட்டேன் என்று சபதம் செய்தவர், திருத்தணியிலும் அதனை பின்பற்றுகிறார். இதில் பரத்துக்கு ஜோடி, சுஹாசி. வில்லனாக சாய்குமார் நடிக்கிறார்.

அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil